Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை!

மயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை!

பிரச்சினைக்குரிய ஒளடதமாக கருதப்படும் மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த மயக்க மருந்தானது வயது வந்தவர்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இந்திய தயாரிப்பு மயக்க மருந்தினால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே குறித்த மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles