Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கிய மூவர் கைது

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கிய மூவர் கைது

எல்பிட்டிய, நாவாந்தகல கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தடியால் தலையில் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் பங்கேற்ற இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த சார்ஜன்ட் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை அங்கிருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles