வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளி வாழைப்பழங்களை வாரத்திற்கு ஒரு முறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் மூன்று வருடங்களில் வருமானத்தை ஐந்து இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தெரிவித்தார்.