எதிர்காலத்தில் தரம் 6 ஆம் வகுப்பிலிருந்து இருந்து ஜப்பான் மொழி கற்கை ஆரம்பமாகவுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் கருதி அமைச்சரவை அனுமதியுடன் கல்வி அமைச்சுடன் சேர்ந்து ஜப்பான் மொழியை கற்பிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனவே இதற்கமைய தரம் 6இல் இருந்து ஜப்பான் மொழி எதிர்வரும் காலங்களில் கற்பிக்கப்படவுள்ளது.
இதனூடாக எதிர்காலத்தில் மாணவ கல்வியின் முன்னேற்றத்திற்காக வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வழியை காட்டவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் போது அரசாங்கம் அவர்களுக்கு 75% புலமைபரிசை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.