பிறந்த குழந்தையை குப்பை மேட்டில் வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக நேற்று (20) விசாரணை ஆரம்பமானது.
சந்தேக நபரான சிசுவின் தாய், வீட்டிலேயே குழந்தையை பிரசவித்து பின்னர் குப்பையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தம்புத்தேகம – கிராலோகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவராவார்.
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையான காலப்பகுதிக்குள் அவர் குழந்தையைப் பிரசவித்து, அதனை குப்பை மேட்டில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாயும் சிசுவும் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.