காலி – கராபிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது.
எனினும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் பாரிய குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமான மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க ஜூலை 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.