இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த அனர்த்தத்தில் 12 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.