சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் 29 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக அண்மைய ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
கொழும்பை தளமாகக் கொண்ட வெரிட்டே ரிசர்ச் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அத்துடன்இ கடந்த மே மாத இறுதிக்குள் அரச வருமானம் தொடர்பான 03 முக்கிய விடயங்களை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 வீதமாக வரி வருவாயை அதிகரிப்பதற்காக இவ்வருடம் மே மாத இறுதிக்குள் இலங்கை 650 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறத் தவறியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதி வழங்குவதே இலங்கை நிறைவேற்றாத மற்றைய விடயம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மே மாத இறுதிக்குள், ஒன்லைன் நிதி வெளிப்படைத்தன்மை அமைப்பை அமைக்கும் பணியை இலங்கை ஓரளவு நிறைவு செய்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.