Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமல் வீரவன்ச இன்று நீதிமன்றுக்கு

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்யுமாறு கடந்த 19ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் அடக்குமுறையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles