பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக அவரது கருத்துகளுக்கு பதிலளித்த ப்ரூனோ திவாகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கடந்த மாதம் 27 ஆம் திகதி சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.