கொட்டாவ தர்மபால கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலை 8:00 மணியளவில் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவ ஆய்வகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.