கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலைகளைக் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை, எரிபொருள் விலை குறைவடைந்தமை, வங்கி வட்டி வீதங்கள் குறைவடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மூலப்பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான இயலுமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ள கட்டுமானத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு மூலப்பொருட்களின் விலைகளைக் குறைப்பது மிகவும் முக்கியமானது.
உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு சில நிறுவனங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.