Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேஸ்புக் காதலனை சந்திக்க 15 வயது சிறுமியையும் அழைத்து சென்ற யுவதி கைது

பேஸ்புக் காதலனை சந்திக்க 15 வயது சிறுமியையும் அழைத்து சென்ற யுவதி கைது

ஃபேஸ்புக் மூலம் பழகிய காதலனை சந்திப்பதற்காக 15 வயதான சிறுமியுடன் யாழ்ப்பாணம் சென்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான குறித்த யுவதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளதுடன், அவரைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

இவ்வாறான பயணத்தை தனியாக செல்வது உகந்ததல்ல என எண்ணிய அவர், தனது அயல் வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியை இந்த பயணத்திற்காக அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் வீட்டாருக்கு தெரியாமல் இரகசியமாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் புறப்பட்டுச் சென்றதாகவும், அங்கு இருவரும் வழிதெரியாமல் தடுமாறுவதை கண்ட பிரதேச மக்கள் அவர்களை கண்டி நோக்கி செல்லும் பேருந்தில் வீடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

யுவதியும் சிறுமியும் வீட்டில் இல்லை என வீட்டார் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, இருவரும் ஒரு நாள் கழித்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது யுவதி அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் சட்டபூர்வ உரிமைக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் யுவதி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், 15 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles