சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளால் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.
மேலும், தொழில்நுட்ப துறையுடன் தொடர்புடைய ஏராளமான நிறுவனங்கள் தங்களது தொழிலை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதும் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் ஆகிய துறைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து துறைசார் கண்காணிப்புக் குழுவில் சமீபத்தில் நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது.