Friday, December 26, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் பலி

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் பலி

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நாட்டில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி மாதம் முதல் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் மரணித்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 225 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 34 கொலைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை.

மற்றையவை சில தனிப்பட்ட தகராறுகள் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுடன் தொடர்புடையவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகிய 225 கொலைகளில் 223 சம்பவங்களைத் தீர்த்து, சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிஸாரால் முடிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles