இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி சீமெந்து மூடை ஒன்றுக்கான செஸ் தீர்வை 5 ரூபாவில் இருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 50 ரூபாவுக்கும் அதிகமான மூடையாக அல்லது மொத்தமாக இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை, கிலோவுக்கு 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.