பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்களிடமிருந்து மாத்திரம் காப்புறுதிகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சில நபர்கள் தள்ளுபடி அட்டைகள் போன்ற சிலவற்றை பொது மக்களிடம் கட்டணத்திற்கு விற்பது அல்லது சில காப்புறுதி தயாரிப்புகளில் தள்ளுபடிகளை வழங்குவது குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டின் இலக்கம் 43 இன் காப்புறுதி தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை என்று IRCSL எச்சரித்தது.
குறித்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு [email protected] எனும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்