Monday, November 10, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு வைத்தியர்கள் மோதல்: பக்கசார்பற்ற விசாரணை கோரும் GMOA

இரு வைத்தியர்கள் மோதல்: பக்கசார்பற்ற விசாரணை கோரும் GMOA

அனுராதபுரம் போதனா வைத்தியசலையில் இரு வைத்தியர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பக்கசார்பின்றி வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கைகலப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் GMOA இன் செயலாளர் வைத்தியர் ரஞ்சன் கனேகம குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விடயம் தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரு வைத்தியர்களுக்கிடையில் ஏற்பட்ட வார்த்தைப் பிரயோகத்தின் பின்னர் ஒரு வைத்தியர் மற்றைய வைத்தியரை தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த வைத்தியர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles