இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழக்கின்றமை மற்றும் பல்வேறுவிதமான பக்கவிளைவுகளை எதிர்கொள்கின்றமை தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த இரு வகையான மருந்துகளும் இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்த மருந்து பொருட்கள் நாட்டில் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த மருந்துப் பொருட்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழந்தமை மற்றும் பல்வேறு விதமான பக்கவிளைவுகளை எதிர்கொண்டமை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.