Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலதா மாளிகை வளாகத்திற்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

தலதா மாளிகை வளாகத்திற்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

ஸ்ரீ தலதா மாளிகையின் பலத்த பாதுகாப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற கண்டி மாநகர சபைக்கு சொந்தமான குப்பை வண்டியொன்றில் இருந்து 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 32 வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ தலதா மாளிகையின் குப்பைகளை ஏற்றிச் செல்வதற்காக நேற்று (18) மாலை ராஜ வீதி பொலிஸ் நிலையத்திலிருந்து கடுமையான பாதுகாப்பு வலயத்திற்குள் குப்பை லொறி நுழையவிருந்த போது, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குப்பை லொறியை சோதனையிட்டனர்.

சோதனையின் போது, வாகனத்தின் ஓரத்தில் தொங்கிய உர பையில் இந்த வெற்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.

நகரில் உள்ள இராணுவ முகாமில் குப்பைகளை சேகரிக்கும் போது இந்த வெற்று தோட்டாக்கள் இருந்திருக்கலாம் என குப்பை வண்டியின் சாரதி மற்றும் உதவி சாரதி தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குப்பை வண்டியின் சாரதி மற்றும் உதவி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles