கொட்டாவை – பொரளை மற்றும் கொட்டாவை – கல்கிசை ஆகிய வழித்தடங்களின் தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்த வழித்தடங்களில் 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேருந்து தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்காமல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேருந்து பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.