எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை பேணாமை காரணமாகவே கடந்த நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதாக அவர் தெரிவித்தார்.