பிரான்ஸில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என பிரான்ஸ் அமைச்சர் கிறிஸ்டோபர் பெச்சு தெரிவித்துள்ளார்.
குறித்த நிலநடுக்கத்தால், பிரான்ஸின் தெற்குப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில், மின்சாரம் உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு இதுபோன்ற சக்கிவாய்ந்த நிலநடுக்கமொன்று பிரான்ஸில் ஏற்பட்டதாக அந்தநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.