யுவதி ஒருவரை கர்ப்பமாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் தனது தந்தையால் ஏற்பட்ட சிரமம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய தனது தாயுடன் சென்ற போது குறித்த யுவதி சந்தேக நபரால் வன்புணரப்பட்டுள்ளார்.
அதன்போது,பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இல்லை என சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி யுவதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களை அன்றைய தினம் விடியும் வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க பொலிஸ் கான்ஸ்டபிள் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த யுவதியின் கைப்பேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தனக்கு போன் செய்து பணம் மற்றும் கணனிகள் தருவதாக கூறி கல்லடி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அழைத்து சென்று கணவன் மனைவி போன்று நடந்துகொண்டதாக யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதாக பொலிஸ் கான்ஸ்டபிளிடம் அவர் அறிவித்துள்ளதுடன், சந்தேக நபர் தன்னை பறக்கணித்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.