நாய்க்குட்டிகள் மத்தியில் கண்டறியப்படாத கொடிய சுவாச நோய்பரவி வருவதாக கால்நடை மருத்துவர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி 8 மாதங்களுக்குள் செல்லப்பிராணிகளைப் பராமரிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சுவாச நோய்க்கு இதுவரை பயனுள்ள சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சுவாசிப்பதில் சிரமம் மற்றும் விரைவான சுவாசம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், (வெளிர்மை), பசியின்மை, சோம்பல் ஆகியவை அறிகுறிகளாகும்.
மேலும் இது கலப்பினங்களிடையே வேகமாகப் பரவுகிறது என்று கால்நடை மருத்துவர் வலியுறுத்துகிறார்.
இந்த நோயிலிருந்து உங்கள் செல்லப்பிராணியைக் காப்பாற்ற, சிறிய நாய்க்குட்டிகளுக்கு தயிர்இ பசும்பால் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவுகளை வழங்குதல் மற்றும் நான்கைந்து மாதங்களுக்கு அவற்றை குளிப்பாட்டுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.