Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறுந்தூர்மலை காணி யாருக்கும் கொடுக்கப்படாது!

குறுந்தூர்மலை காணி யாருக்கும் கொடுக்கப்படாது!

முல்லைத்தீவு குறுந்தூர் மலை காணியை வேறு யாருக்கும் கொடுக்க தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் துறை நிபுணர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு உறுதிபடுத்தியுள்ளது.

தொல்பொருள் பெறுமதிமிக்க இந்த காணியில் இந்து மற்றும் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பாரம்பரியமாக தமிழ் மக்கள் உரிமைபாராட்டி வந்த இந்த இடத்தில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, அங்குள்ள பெரும்பரப்பு காணி விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அண்மையில் ஜனாதிபதிக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்றும் பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த காணியை வேறெவருக்கும் கொடுப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக எல்லாவலை மேதாநந்த தேரருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles