ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்போது இலங்கையின் நல்லிணக்கம்இ பொறுப்புக்கூறல் விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.