Saturday, January 31, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று சில பகுதிகளில் சீரற்ற வானிலை

இன்று சில பகுதிகளில் சீரற்ற வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles