லங்கா சதொச நிறுவனம் மேலும் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையினை குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் கடலை பருப்பு 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 275 ரூபாவாகும்.
இந்த விலை குறைப்பானது இன்று (15) முதல் அமுலுக்கு வரும்.