பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இராணுவ சிப்பாய் பணிபுரியும் மின்னேரியா இராணுவ முகாமின் மூன்றாவது பொறியியல் சேவை தலைமையகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாயை கைது செய்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் அனுராதபுரம் புருந்தங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.