மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நால்வர் அந்நாட்டில் காணாமல் போயுள்ளனர்.
சர்வதேச பொலிஸ் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரித்தானியா சென்றுள்ளதாகவும், கடந்த 4 ஆம் திகதி மீண்டும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டியிருந்ததாகவும், ஆனால் இதுவரை இருவர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அவர்கள் நால்வரையும் சேவையில் இருந்து விலகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸ் விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் இரண்டு கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
நாட்டிலுள்ள சர்வதேச பொலிஸ் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த அதிகாரிகள் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலதிக விசாரணைகளில் இலங்கைக்கு வராத அதிகாரிகள் சிலர் பொலிஸ் தலைமையகத்தில் 05 வருட விடுமுறை கோரியுள்ளதாகவும் இந்த கோரிக்கைகளுக்கு பொலிஸ் தலைமையகம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.