60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
60 வகையான மருந்துகளின் உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை இன்று முதல் அமுலாகும் வகையில் 16 சதவீதத்தினால் குறைப்பதற்காகவும் மற்றும் மூன்று மாதங்களுக்கொரு முறை மருந்துகளின் விலைகளை மீளாய்வு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை கடந்த அனுமதி வழங்கியிருந்தது.