பாண் விலையில் மாற்றம் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பாண் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருந்ததுடன், அது நடைபெறாது என சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் பெற்றவர்களுக்கு மாத்திரம் கோதுமை மாவை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க தீர்மானித்துள்ளமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.