Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமுர்த்தி கொடுப்பனவை இழந்தோர் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

சமுர்த்தி கொடுப்பனவை இழந்தோர் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

சமுர்த்தி மானியங்களை இழந்த பயனாளிகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நலன்புரி கொடுப்பனவுகளை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும், பயனாளிகளை எப்போதும் ஏழைகளாக வைத்திருக்காமல், அவர்களுக்கு பயன் கிடைக்கும் வகையிலான திட்டத்தை தயாரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய நலன்புரி திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles