Thursday, December 11, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசப்ரி குறித்த சுங்கத்திடம் அறிக்கை கோரினார் சபாநாயகர்

சப்ரி குறித்த சுங்கத்திடம் அறிக்கை கோரினார் சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சபாநாயகர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles