Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து குழப்படைய தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

இன்றைய தினம் சில வர்த்தக வங்கிகளில் டொலரின் விற்பனை விலையானது 335 என்ற மட்டத்தை அடைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட நிலைமையே இது. அதனை நிர்வகிப்பதற்கு மத்திய வங்கி செயற்படும்.

டொலர் பெறுமதி அதிகரிப்பு குறித்து குழப்பமடைய தேவையில்லை. டொலரின் விலையானது வழங்கலுக்கும், தேவைக்கும் இடையில் தீர்மானிக்கப்படுகிறது.

தற்போது மத்திய வங்கி 03 பில்லியன் டொலர்களை வாங்கியுள்ளது. அதனால்தான் டொலர்களின் பெறுமதி இந்த நிலையிலாவது இருக்கிறது. இல்லையெனில் இன்னும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles