Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை முதல் டிஜிட்டல் முறையில் கடவுச்சீட்டு விநியோகம்

நாளை முதல் டிஜிட்டல் முறையில் கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொதுமக்கள் கடவுச்சீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறையை நாளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிரதேச செயலகங்களுடன் இணைந்த ஆட்பதிவு திணைக்களத்தின் உப காரியாலயத்தில் கைரேகைகளை வழங்க முடியும்.
இணையவழி கடவுச்சீட்டு வழங்கும் பணி நாளை (15.06.2023) ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், விரும்பும் எவரும் குடிவரவுத் திணைக்களத்திற்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளைப் பெறலாம்.

கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை வழமை போன்று இடம்பெறும் எனவும், இந்த புதிய திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பின்னர் மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு தபால் சேவை மூலமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles