Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி - கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு

ஜனாதிபதி – கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (14) இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவது உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles