ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முற்பட்டால் அவருக்கு தமது ஆதரவை வழங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சனத் நிஷாந்த, தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என்றும் கூறினார்.
அண்மையில் ஜனாதிபதியால் கூட்டப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.