செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திர அச்சடித்தலை தனியாருக்கு வழங்க முடிவு

சாரதி அனுமதிப்பத்திர அச்சடித்தலை தனியாருக்கு வழங்க முடிவு

தனியாரிடம் இருந்து சுமார் 8 இலட்சம் சாரதி உரிம அட்டைகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க, திணைக்களத்தில் உள்ள அச்சுப்பொறிகளின் திறன் போதிய அளவில் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 20 கோடி ரூபாவை செலவிட்டு புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் இருந்து அட்டை பிரிண்டர்களை பெற்று ஒவ்வொரு அட்டைக்கும் 150 ரூபா வீதம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles