Wednesday, December 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடுமையான கையூட்டல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடுமையான கையூட்டல்

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில், கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்து, உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.

பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பின்னர், முன்வைக்கப்படும் இழப்பீட்டு கோரிக்கையை மையப்படுத்தி, கையூட்டல் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர்கள் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கோரிக்கையைச் சூழவுள்ள தலையீடு மற்றும் வெளிப்புற அழுத்தம் பற்றி மனுதாரர்கள் தரப்புக்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணை, நாளை மீள இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles