Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வைத்தியசாலைகளில் CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு

அரச வைத்தியசாலைகளில் CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு

அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் 10இற்கும் மேற்பட்டவை முழுமையாக செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

3 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம கூறியுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் தற்போது 43 CT ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே செயற்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கராப்பிட்டிய, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருக்கும் CT ஸ்கேன் இயந்திரங்களே இவ்வாறு செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles