Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதலை தாக்குதலுக்குள்ளாகி பெண் பலி

முதலை தாக்குதலுக்குள்ளாகி பெண் பலி

அம்பலாந்தோட்டை – புஹூல்யாய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணொருவர் முதலை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுத்த போது அருகில் இருந்தவர்கள் அலறியதில் முதலை அவரது காலை துண்டாக்கி எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அம்பலாந்தோட்டை – வாதுருப்ப பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles