Wednesday, February 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியுடன் இந்தியா செல்கிறார் ஜீவன்

ஜனாதிபதியுடன் இந்தியா செல்கிறார் ஜீவன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார்.

இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles