வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை சூழவுள்ள சூறாவளி நிலை காரணமாக மீன்பிடி தொழில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தையின் செயலாளர் என்.ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 400 டன் மீன்கள் வந்தாலும், இந்த நாட்களில் 100 டன்களுக்கும் குறைவான மீன்களே கிடைக்கின்றன எனவும், இதனால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தையில் கிடைக்கும் மீன்களின் அளவு 30 நிமிடங்களில் தீர்ந்துவிடும் எனவும், மீன் தட்டுப்பாடு காரணமாக பேலியகொடையில் இருந்து மீன்களை எடுத்துச் செல்லும் 50 சதவீதத்திற்கும் அதிகமான சிறிய மீன் கடைகள் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.