உள்ளூர் தொழில்முனைவோருக்கு 7,000 க்கும் மேற்பட்ட பொருட்களை பிரித்தானியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சில் நேற்று (12) நிர்மாணத்துறை தொடர்பான கைத்தொழில்களை மீளமைப்பதற்காக வண்ணப்பூச்சு மற்றும் ஓடு கைத்தொழில் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய UK GSP திட்டம் மற்றும் ‘வளரும் நாடுகளின் வர்த்தக திட்டம் (DCTS)’ மூலம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.