நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 57 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களில் 33 வீதமானவர்கள் தற்போது கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், இலங்கையின் மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகளவான உணவுப் பாதுகாப்பற்ற மக்கள் வாழ்வதாகவும் மேலும், கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.