Thursday, April 3, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை அணுகவும்

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை அணுகவும்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

நாளாந்த நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் தனிநபர்கள் போதுமான ஓய்வு பெறுவது அவசியம் என்றார்.

யாராவது பணியில் இருந்தால் அல்லது பாடசாலைக்குச் சென்றால், அவர்கள் சில நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

இரண்டாவது மிக முக்கியமான விடயம் திரவ உட்கொள்ளலை அதிகரிப்பது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த பெரசிட்டமோல் மருந்தை உட்கொள்ளலாம்.

எவ்வாறாயினும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles