மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள கால்நடைகளுக்கும் “Lumpy skin disease” எனப்படும் தொற்று நோய் பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாகாணங்களின் பல பகுதிகளில் “Lumpy skin disease” என்ற தோல் கட்டி நோயுடன் கூடிய கால்நடைகள் கண்டறியப்பட்டுள்ளது கவலையளிக்கின்றது என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இந்நோய் அதிகமாக காணப்படுவதாகவும், பரவலைக் கட்டுப்படுத்த கால்நடைகளை கொண்டு செல்வதற்கு தடை விதித்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்நோய் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.