கால்நடைகளுக்கு தோல் நோய் பரவும் பகுதிகளில் இருந்து இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.